சபரிமலைக்கு பெண்கள் செல்வதை தடுக்கும் முயற்சிகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என கேரள முதல்வர் தெரிவிப்பு.

Share Button

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை தடுக்கும் எந்தவொரு முயற்சிக்கும் கேரள அரசாங்கம் விட்டுக் கொடுக்க மாட்டாதென மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமுலாக்க பொலிஸாருக்கு உதவப் போவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

மாதவிடாய் பருவத்தைச் சேர்ந்த பெண்கள் ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல அனுமதி கிடையாது. சமீபத்தில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்தத் தடையை நீக்குமாறு தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதன் பின்னர் நேற்று ஐயப்பன் கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டன. சில பெண்கள் நிலாக்கால் நுழைவாயில் வழியாக கோயிலை நோக்கிச் சென்றபோது, ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11