வீதி விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share Button

வீதி விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மேலும் அதிகரிக்குமானால், நாட்டின் அபிவிருத்தி மற்றும் தொழிற்படைக்கு பாரிய சவாலாகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மக்களுக்கு அறிவுறுத்தும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பிரதி அமைச்சர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.

ஜனவரி தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் இரண்டாயிரத்து 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கடந்த ஏழு வருடங்களில் பலியானோரின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 500ஐ எட்டுகிறது.

அரசாங்கம் தற்போது ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தின் காரணமாக கிரமான முறையில் வீதி விபத்துக்களை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய பேரவையின் தலைவர் சிசிர கோத்தாகொட எமது நிலையத்திற்கு தெரிவித்தார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *