இந்திய அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி

Share Button

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 578 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸிற்காக 178 ஓட்டங்களையும் பெற்றது.

இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 337 ஓட்டங்களை பெற்ற நிலையில், இந்திய அணிக்கு 420 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும், இந்திய அணி தமது இரண்டாவது இன்னிங்ஸில் 192 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

இந்தப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக இரட்டை சதம் பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ றூட் தெரிவானார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்கு போட்டிகளைக் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *