LMD’ இன் அறிமுக ‘‘Most Awarded’’ பிரசுரத்தின் Top 50 தரப்படுத்தலில் SDB வங்கி தெரிவு

Share Button

LMD சஞ்சிகையின் அறிமுக பிரசுரமான ‘Most Awarded’ இன் Top 50 நிறுவனங்கள் தரப்படுத்தலில் SDB வங்கி இடம்பிடித்துள்ளது. அதனூடாக, இலங்கையிலுள்ள சிறந்த கூட்டாண்மை நிறுவனங்கள் வரிசையில் உயர்ந்த ஸ்தானத்தைக் கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுகளில் உச்சம் என புகழ்பெற்றுள்ளதுடன், உள்நாட்டிலும் சர்வதேச வியாபார தளத்தில் பெற்றுக் கொண்ட கௌரவிப்புகளின் பிரகாரம் நாட்டிலுள்ள சிறந்த நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது. குறிப்பிட்ட காலப்பகுதியினுள் நாட்டிலுள்ள சிறந்த வியாபார ஸ்தாபனங்கள் பெற்றுக் கொண்ட ஒட்டுமொத்த விருதுகளின் பிரகாரம், நாட்டின் சிறந்த வியாபாரங்களை தரப்படுத்துவதாக ‘Most Awarded’ அமைந்துள்ளது.

அறிமுக பிரசுரத்தின் போது கவனம் செலுத்தப்பட்டிருந்த 2019 ஜனவரி முதல் 2020 செப்டெம்பர் வரையிலான ஆய்வு காலப்பகுதியில், நாட்டின் பல பல்தேசிய நிறுவனங்கள் மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட உள்நாட்டு வியாபாரங்கள் போன்றவற்றை பின்தள்ளி, இலங்கையின் சிறந்த விருதுகளைப் பெற்ற 50 நிறுவனங்கள் வரிசையில் SDB வங்கி முன்னேறியிருந்தது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *