நாடு பாரிய கடன் சுமையில் சிக்குண்டுள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்தார்

Share Button

நாடு பாரிய கடன் சுமையில் சிக்குண்டுள்ளதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அமைச்சர் மங்கள சமரவீர நிராகரித்தார். எப்பொழுதும் சீன கடன் சுமையில் இருந்து இலங்கையை மீட்டது தற்போதைய அரசாங்கமே. நிலத்தை மாத்திரமன்றி, ஆகாத்தையும் எல்லையற்ற முறையில் சீனாவுக்கு குத்தகைக்கு எழுதி கொடுத்த யுகத்திற்கு இந்த அரசாங்கம் முடிவு கட்டியதையும், அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டினார். எம்பிலிப்பிட்டிய விவசாயிகளின் தானிய்ங்களை பாதுகாக்கும் மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ஐந்தாவது தானிய பாதுகாப்பு மத்திய நிலையமாக திறந்து வைக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்திற்காக 285 மில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டது. அனுராதபுரம், மன்னார், புத்தல மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறான தானிய பாதுகாப்பு மத்திய நிலையஙகள் திறக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் காலத்தில் மற்றுமொரு மத்திய நிலையம் பொலநறுவையில் திறக்கப்படவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *