அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் கோர விபத்து.
அமெரிக்காவின் டெக்ஸாஸில் கோர விபத்தொன்று நிகழ்ந்திருக்கிறது. 130 வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதால், இந்த விபத்து சம்பவித்திருக்கிறது. இதனால், ஆறு பேர் உயிரிழந்திருப்பதுடன், 36 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரதேசத்தில் நிலவிய உறைபனி மற்றும் இருண்ட வானிலை காரணமாக இந்த விபத்து சம்பவித்திருப்பதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். விபத்தின் போது, பலர் வாகனங்களுக்குள் சிக்குண்டிருந்தார்கள். அவர்களை மீட்பதற்கு தீ அணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மிகுந்த பிரயத்தனம் மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.