இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி

Share Button

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 317 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சென்னையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக 329 ஓட்டடங்களையும், இரண்டாவது இன்னிங்ஸிற்காக 286 ஓட்டங்ளையும் பெற்றது. இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 134 ஓட்டங்களை பெற்றது. அதன்படி, தமது இரண்டாவது இன்னிங்ஸில் 482 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 164 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. அதன்படி, நான்கு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தற்சமயம் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *