பிரித்தானியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான தற்காலிக விமானப் பயணத் தடை நீக்கம்

Share Button

உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டதன் காரணமாக பிரித்தானியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக விமானப் பயணத் தடை நீக்கப்பட்டிருக்கிறது. இதனை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருக்கிறது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளுக்கு, இணங்க பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழஙகப்பட்டிருக்கின்றது. இதற்கு ஏற்ற வகையில் வரையறைகள் இலகுபடுத்துமாறு சுகாதார அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *