ஜனநாயக போராட்டக்காரர்களை அடக்க நடவடிக்கை எடுத்தால், தகுந்த பதிலடி கிடைக்குமென்று ஐக்கிய நாடுகள் சபை, மியன்மார் ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை
மியன்மாரின் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடுபவர்களை அடக்குவதற்கு நடவடிக்கை எடுத்தால், அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை மியன்மார் ஆட்சியாளர்களை எச்சரித்திருக்கிறது. ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்துபவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார். ஆட்சிக்கு எதிராக போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்தே ஐ.நா சபையின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.