அவுஸ்திரேலிய பேஸ்புக் பயனாளிகளுக்கு புதிய மட்டுப்பாடுகள்

Share Button

பேஸ்புக் நிறுவனம் அவுஸ்திரேலிய பயனாளிகளுக்கு செய்திகள் தொடர்பான மட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. பேஸ்புக் வலைத்தளத்தில் செய்திகளை பார்வையிடுவதற்கோ, அவற்றை பகிர்ந்து கொள்வதற்கோ அவுஸ்திரேலிய பயனாளிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் செய்திகளை பகிர்வதாயின், அதற்கான கட்டணத்தை அறவிட வேண்டும் என்ற சட்டமூலம் அவுஸ்திரேலியாவில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் வேளையில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் உள்ள பேஸ்புக் பயனாளிகளுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக பிபிசி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *