ஐக்கிய இராஜ்யத்திற்கும், இலங்கைக்கும் இடையில் விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது
ஐக்கிய இராஜ்யமும், இலங்கை அரசாங்கமும் அறிமுகம் செய்திருந்த தற்காலிக பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி தீர்மானிக்கப்பட்டது. 14 நாட்கள் தனிமைப்படுத்தல், பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளல் போன்ற தீர்மானங்களுக்கு அமைய இந்தப் பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.