ஜப்பானில் புதிய ஒலிம்பிக் குழுத் தலைவர் நியமனம்
2020 டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவராக ஜப்பானின் முன்னாள் ஒலிம்பிக்துறை அமைச்சர் சர்வதேச ஷிகோ ஹஸிமொட்டோ நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏழு தடவைகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவராவார். ஒலிம்பிக் குழுவின் தலைவராக செயற்பட்ட யொஷிரோ மோரி, பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இவரது நியமனம் இடம்பெற்றிருக்கிறது. யொஷிரோ மோரி பாலியல் ரீதியான கருத்துக்களை வெளியிட்டிருந்தமையினால், அவருக்கு பதவியை இராஜினாமா செய்ய நேர்ந்திருக்கிறது.