ஹுவாவே நிறுவனம் பன்றி பண்ணைகள் தொடர்பான துறையில் முதலீடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளது.
புகழ்பெற்ற கைத்தொலைபேசி, தொழில்நுட்ப பொருட்கள் உற்பத்தி நிறுவனமான சீனாவின் ஹுவாவே நிறுவனம் பன்றி பண்ணைகளை அமைப்பதற்கு தீர்மானித்திருக்கிறது. ஹுவாவே கைத்தொலைபேசி உட்பட தொழில்நுட்ப பொருட்களின விற்பனையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து பன்றிப் பண்ணைகளை கூடுதலாக அமைக்க நிறுவனம் எதிர்பார்த்திருக்கிறது. இதன் மூலம் உயர்ந்தபட்ச இலாபத்தை அடைந்து கொள்ள முடியும் என்று நிறுவனம் எதிர்பார்த்துள்ளது. அமெரிக்காவில் ஹுவாவே கைத்தொலைபேசி உட்பட தொழில்நுட்ப பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடைகளைத் தொடர்ந்து நிறுவனம் பாரிய அளவிலான நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.