அவுஸ்திரேலிய பகிரங்க ரெனிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாக்கா சம்பியன் – ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நாளை

Share Button

அவுஸ்திரேலிய பகிரங்க ரெனிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டி நாளை மெல்பேர்ன் நகரில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் ஜொகொவிச் மற்றும் மெற்வடடேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

 

இதேவேளை, மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாக்கா வெற்றியீட்டியிருக்கிறார். மெல்பர்ன் நகரில் இன்று; நடைபெற்ற இந்தப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடியை நவோமி ஒஸாக்கா எதிர்கொண்டார்.; 6க்கு 4, 6க்கு 3 என்ற நேர்செட்களில் நவோமி ஒஸாக்கா, ஜெனிபர் பிராடியை தோற்கடித்தார். இதன் மூலம் இந்த வருடத்தின் முதல் கிரான்;ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் சம்பியனாக நவோமி ஒஸாக்கா முடிசூடிக் கொண்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *