ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரேரணைகளை எதிர்கொள்ள அரசாங்கம் தயார்

Share Button

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படும் பிரேரணைகளை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணையாளரின் பிரேரணையை, நாட்டின் அரசியலமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்த முடியாதென அரசாங்கம் சுட்டிக்காட்டியிருக்கிறது.

 

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்தின் தூரநோக்கற்ற வேலைத்திட்டங்களினால் இலங்கைக்கு எதிராக பிரேரணை முன்வைப்பதற்கு ஏதுவாக அமைந்தது என அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்திருக்கிறார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *