இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு – ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு
இந்தோனேசியாவில் பெய்துவரும் அடைமழை காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் மழை பெய்து வருவதாக இந்தோனேசிய வானிலை மையம் குறிப்பிட்டிருக்கிறது. அடுத்த வாரம் வரை மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கலாமென்றும் வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை. வெள்ளம் ஏற்பட்டிருக்கும் பிரதேசங்களில் மீட்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாக அந்நாட்டு அனர்த்த நிவாரண முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.