இலங்கை சுயாதிபத்திய நாடு என்ற வகையில் பொறுப்பகளை நிறைவேற்றுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு
இலங்கை சுயாதிபத்திய நாடு என்ற வகையில் தனது பொறுப்பகளை உரிய வகையில் நிறைவேற்றுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருக்கிறார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் ஒரு தரப்பைச் சார்ந்த அறிக்கையை முன்வைத்துள்ளார். அதன் உள்ளடக்கத்தை புரிந்துகொண்டு அந்த அறிக்கையை நிராகரித்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.