கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை அவஸ்திரேலியா நாளை ஆரம்பிக்கவுள்ளது
கொவிட் வைரசுக்கு எதிரான தடுப்புசி ஏற்றும் நடவடிக்கையை அவஸ்திரேலியா நாளை ஆரம்பிக்கவுள்ளது. ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியே; ஏற்றப்படவிருக்கிறது. இதேவேளை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஷன் இன்று தடுப்பூசி ஏற்றிக்கொண்டார். கொவிட் தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில் நிலவும் அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் அவர் முதலில் தடுப்பூசி ஏற்றினார். இந்த நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் ஈடுபடுபவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்த்தாக்கத்திற்கு உட்பட்டிருப்பவர்களுக்கும் முதல் கட்டத்தில் தடுப்பூசி ஏற்றப்படும் என்று பிரதமர் ஸ்கொட் மொரிஷன் தெரிவித்திருக்கிறார்.