நாட்டில் மேலும் பத்து கொவிட் மரணங்கள் பதிவு.

Share Button

மேலும் 518 கொவிட தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, நாடு பூராகவும் இனங்காணப்பட்டுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 734 ஆகும். முழுமையாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 299 ஆகும். நேற்றைய தினமும் 843 பேர் குணமடைந்தது வைத்தியசாலைகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.

கொவிட் தொற்றுக் காரணமாக இதுவரை 445 மரணங்கள் சம்பவித்துள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றைய தினமும் பத்து கொவிட் மரணங்களை உறுதிப்படுத்தியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொலன்னாவ, வெள்ளவத்தை, களுத்துறை, வஸ்கடுவ, பிபில குறுத்தலாவ, பிற்றக்கோட்டே, குடாகல்கமுவ, ரத்மலான, ஹட்டன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் 58 வயதிற்கு அதிகமாகும் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நேற்றைய தினம் வரை நாட்டில் கொவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 308 ஆயிரத்தையும் தாண்டியிருப்பதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 35 ஆயிரத்து 912 பேர் இந்தத் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர்.

இதுவரை உலகம் முழுவதிலும் 24 லட்சத்து 77 ஆயிரத்து 433 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. சுமார் 11 கோடி 20 லட்சம் பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் 8 கோடி 72 லட்சத்து 46 ஆயிரம் பேர் வரை குணமடைந்துள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *