உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய 273 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 273 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. தாக்குதலைத் திட்டமிட்டமை, மேற்கொண்டமை, மனிதப் படுகொலை, சொத்துச் சேதம் உள்ளிட்ட குற்றச்செயலுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்டு தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணை நடத்தி கைது செய்யப்பட்டவர்களில் 32 பேர் மீது ஏற்கெனவே வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார். தற்போது தடுப்புக்காவலில் உள்ள சந்தேக நபர்கள் மீதும் வழக்குத் தொடரப்படும். இவர்களில் பல்வேறு தராதரங்களைக் கொண்டவர்கள் இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இது தவிர இந்தத் தாக்குதலை தடுக்காமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.