ஜெனீவா மனித உரிமைகள் பேரவை நாட்டுக்கு எதிரான யோசனைகளைக் கொண்டு வரும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் அனைத்து அமைப்புக்களும் பேதங்களைப் புறந்தள்ளி இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும் – கலாநிதி பிரதீபா மகாநாம

Share Button

இலங்கை மனித உரிமைகளை மீறியிருப்பதாகக் கூறி ஜெனீவா மனித உரிமைகள் பேரவை நாட்டுக்கு எதிரான யோசனைகளைக் கொண்டு வரும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் அனைத்து அமைப்புக்களும் பேதங்களைப் புறந்தள்ளி இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும் என கலாநிதி பிரதீபா மகாநாம தெரிவித்துள்ளார். வடபகுதியில் எல்ரிரிஈ அமைப்பிற்கு ஆதரவானவர்கள் தற்போது சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி, காணாமற்போனோர் தொடர்பாக பிழையான தகவல்களை ஜெனீவாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நாடு ஏகாதிபத்தியத்தை நோக்கித் தள்ளப்பட்டு வருவதாக அவர்கள் கூறுகின்றனர். சர்வதேச மனித நேய சட்டங்களை அரசாங்கம் கடுமையாக மீறிவருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை விசாரிப்பதற்காக யுத்த குற்ற நீதிமன்றம் ஒன்றுக்கு அனுப்ப வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர். மீண்டும் இந்த நிலமையில் அரசாங்கம் உடனடியாக வெளிநாட்டுத் தூதுவர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய தேவை காணப்படுவதாக கலாநிதி பிரதீபா மகாநாம சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *