மினிப்பே அணையை அபிவிருத்தி செய்யும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
மினிப்பே பாரிய குளம் மற்றும் மினிப்பே அணை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பார்வையிட்டுள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தின்கீழ், ஏழாயிரத்து 500 ஹெக்டெயர் விவசாய நிலத்திற்கு மகாவலி நீர் கிடைக்கப் பெறும். 1948ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மினிப்பே அணை, 1980ஆம் ஆண்டே இறுதியாக புனரமைப்பு செய்யப்பட்டது. அதன்படி, 40 ஆண்டுகள் பழைமையான அந்த அணைக்கட்டை முழுமையாக அபிவிருத்தி செய்யும் பணி தற்சமயம் மேற்கொள்ளப்படுகிறது.