கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி.

Share Button

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்சமயம் நிறைவு பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மார்ச் முதலாம் திகதி தொடக்கம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார். சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில், விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் இரண்டை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, பரீட்சைக்கு தோற்றும் பரீட்சார்த்திகள், பரீட்சை அனுமதி அட்டை தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் எதிர்நோக்கினால் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு சென்று அதனை சரி செய்து கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *