கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் கொவிட் தடுப்பூசி.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் கொவிட் தடுப்பூசிகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தமக்கு காணப்படும் நோய் நிலைமைகள் காரணமாக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் சில பிரச்சினைகள் காணப்படுமாயின், மாகாண சுகாதார வைத்திய அதிகாரியை சந்தித்து அதுகுறித்த தெளிவை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.