மூன்று மாதங்களுக்கு ஒருதடவை தொழிற்சங்கங்களைச் சந்திக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

Share Button

ஊழியர்களினதும் தொழிலாளர்களினதும் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். பாரிய எதிர்பார்ப்புடன் மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினார்கள். மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அரச, அரச சார்பு, கூட்டுத்தாபன ஊழியர்களின் தீர்க்கப்படாத நீண்டகாலப் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்களுடன் இது பற்றிக் கலந்துரையாடி அதற்கான தீர்வை எடுக்க அரசாங்கம் என்றும் தயார் எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி இதுபற்றிக் கருத்து வெளியிட்டார். இந்தத் தொழிற்சங்கங்கள் வழங்கும் ஒத்துழைப்புக்களையும் ஜனாதிபதி பாராட்டினார். 3 மாதங்களுக்கு ஒருதடவை தொழிற்சங்கங்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. சகல நிறுவனங்களையும் லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்தார்.

சகல கூட்டுத்தாபனங்களுக்கும் தொழில் பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் காமினி லொக்குகே, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார. 180 நாட்களுக்கு மேல் பணியாற்றி வரும் நிரந்தர நியமனம் கிடைக்காத ஊழியர்கள் உள்ளுராட்சி மன்ற நிறுவனங்களில் தொடர்ந்தும் கடமைபுரிந்து வருவதாக தொழிற்சங்கப பிரதிநிதிகள் இதன் போது சுட்டிக்காட்டினார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *