பாகிஸ்தான் பிரதமர் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று முற்பகல் சந்திக்க இருக்கின்றார். இதனைத் தொடர்ந்து கொழும்பு சங்ரில்லா ஹொட்டலில் இடம்பெறவுள்ள வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளார். இதனையடுத்து சபாநாயகரும் விளையாட்டு அமைச்சரும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள பகல்போசன நிகழ்விலும் பாகிஸ்தான் பிரதமர் பங்கேற்கவுள்ளார். கிரிமட்டல மாவத்தையில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் தொடர்பான கலந்துரையாடலிலும் அவர் பங்கேற்கவிருக்கின்றார். பாகிஸ்தான் பிரதமர் இன்று பிற்பகல் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பவுள்ளார்.