பாகிஸ்தான் தேவையான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய நேச நாடாகும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ
பாகிஸ்தான் தேவையான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய நேச நாடாகும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்புக்களை பிரதமர் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் விஜயம் தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள ஊடக வெளியீட்டில் இந்தவிடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதாரம், வர்த்தகம், விஞ்ஞானத் தொழில்நுட்பம், பாதுகாப்பு, கல்வி உட்பட பல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது. பிராந்திய, சர்வதேச நெருக்கடிகள் பற்றியும் அங்கு கவனம் செலுத்தப்பட்டது.