பயங்கரவாதம், அடிப்படைவாதம், தீவிரவாதம் என்பனவற்றுக்கு எதிரான போராட்டத்துடன் பாகிஸ்தான் இலங்கையுடன் கைகோர்த்துள்ளது.

Share Button

வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பவற்றை சீர்செய்வதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தாம் மதிப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதம், அடிப்படைவாதம், தீவிரவாதம் என்பவற்றுக்கு எதிரான போராட்டத்தில் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவது அவசியமாகும். சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தகம், ஆயுத வியாபாரம், ஏனைய சட்டவிரோத செயற்பாடுகள் என்பனவற்றைத் தடுக்க புதிய முகவர் நிலையங்களின் ஊடாக தகவல்கள் பரிமாறப்பட இருக்கின்றன. விளையாட்டுத் துறை ஒத்துழைப்பில் காட்டும் ஆர்வம் தொடர்பாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். பாகிஸ்தானின் உயர்மட்ட வியாபாரத் தூதுக்குழு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ள முதலீட்டு மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *