உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு – மூன்று நாள் விவாதத்திற்கு அரசாங்கம் தயார்

Share Button

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

நாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் பற்றி விளக்குவதற்காக இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக மூன்று நாள் விவாதம் அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார். இந்த விவாதத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *