ஏற்றுமதி விவசாய வலயத்தை ஆரம்பிக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்.
ஏற்றுமதி விவசாய வலய தேசிய வேலைத்திட்டம் ஹம்பாந்தோட்டையில் இன்று ஆரம்பமானது. அங்குரார்ப்பண வைபவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அங்குனுகொலபெலஸ்ஸ, கஸாகல ரஜமஹா விஹாரையில் இடம்பெற்றது.
தேசிய உற்பத்தியில் ஏற்றுமதித்துறை மூலம் தற்போது இரண்டு வீதமாக காணப்படும் பங்களிப்பினை 2025ஆம் ஆண்டை அடையும் போது நான்கு சதவீதமாக உயர்த்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன், விவசாயிகளை ஊக்கப்படுத்தி, கரும்பு, சோளம், முந்திரிகை, மிளகு, கறுவா, வெற்றிலை உள்ளிட்ட பயிர்ச் செய்கைகளை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் தொலை நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உறுதிமொழிக்கு அமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.