மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்குவதே தமது அடிப்படை நோக்கமாகும் என ஜனாதிபதி தெரிவிப்பு.

Share Button

மக்களை மையப்படுத்திய பொருளாதாரத்தை உருவாக்குவதே தமது அடிப்படை நோக்கமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் கோமரங்கடவல பிரதேச செயலாளர் பிரிவில் இன்று இடம்பெற்ற கிராமத்துடன் கலந்துரையாடல் வேலைத்திட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்றார்.

 

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டத்தை சிறப்பாக முன்னெடுப்பதற்கு மிகவும் வினைத்திறனான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சு மற்றும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக பொதுமக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *