என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், தொழில் முயற்சிகளுக்கான கடன் தேவைகளை பூர்த்தி செய்ய விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், தொழில் முயற்சியாளர் ஒருவர் தமது கடன் தேவையை பூர்த்தி செய்வதற்காக துரிதமான செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் பிரதம முகாமையாளர் கங்கா வீரக்கொடி தெரிவித்தார்.
இந்த செயல் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் மூலம் வங்கிகளின் கடன்;;பெற வருபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக வங்கிகளில் அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு இரு மொழிகளிலும் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்;டார்.