அரச சேவையாளர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது

Share Button

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பான அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி கையளிக்கப்படும் என்று, இதுபற்றி ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரனுக்கே தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் சகல உறுப்பினர்களும் தற்சமயம் விரைவான முறையில் அறிக்கையை தயாரித்து வருகிறார்கள். புதிய அறிக்கையின் மூலம் சம்பளம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், அமுலில் உள்ள சம்பள முரண்பாடு நீக்கப்படும் என்றும் அவர் வலியறுத்தியுள்ளார். அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் என்பனவற்றின் சம்பளங்கள் பற்றியும் இதன் போது கவனம்

செலுத்தப்படவிருக்கின்றன. சில கூட்டுத்தாபனங்களிலும், நியதிச் சபைகளிலும் சம்பள முரண்பாடுகள் நிலவுகின்றன. அறி;க்கையை தயாரிக்கும் போது, இந்த விடயங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *