தேசிய இளைஞர் விளையாட்டு விழா இன்று ஆரம்பம். நேற்றைய இந்திய – மேற்கிந்திய ஒருநாள் போட்டி சமநிலையில் முடிவு

Share Button

30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா மாத்தறை கொட்டவில விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகிறது. இதன் அங்குரார்ப்பண நிகழ்ச்சியில் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். ஞாயிற்றுக்கிழமை நிறைவு விழா பெறும். அமைச்சர் சாகல ரத்னாயக்க நிறைவு விழாவில் பிரதம அதிதியாகப் பங்கேற்பார்.

நாட்டின் சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் மூவாயிரம் விளையாட்டு வீர வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். இதனை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இளைஞர் அலுவல்களுக்கான செயற்திட்டம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் போன்றவை இணைந்து ஏற்பாடு செய்கின்றன.

இந்த விழாவில் தடகள போட்டிகளுக்கு அப்பால், கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், கபடி, கால்பந்தாட்டம் முதலான போட்டிகளும் இடம்பெறும். ஆகவும் திறமைசாலிகளான நான்கு போட்டியாளர்கள் மோட்டார் சைக்கிள்களை பரிசாகப் பெறுவார்கள். போட்டிச் சாதனையை முறியடிப்போருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்படும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *