11 பேர் காhணமல் போன சம்பம் தொடர்பிலான சந்தேக நபருக்கு மேலும் சில வழக்குகள்

Share Button

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் கப்பம் பெற்றுக் கொள்வதற்காக 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகத்திற்குரியவராக முன்னாள் கடற்படை லெப்டினன் கொமாண்டோ சந்தன பிராசாத் ஹெட்டியாராச்சி கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில்; மேற்கொள்ளப்பட்ட தவறுகள் தொடர்பில் தனியாக வழக்கு பதிவு; செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார். குற்றவிசாரணைத் திணைக்களத்திற்கு அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்படும்போது போலியான அடையாள அட்டை, வெளிநாட்டு கடவுச் சீட்டு என்பவற்றை வைத்திருந்ததுடன் போலியாக தன்னை இனம் காட்டியமை, தவறாக தகவல்களை வழங்கியமை உள்ளிட்டவை தொடர்பில் அந்த வழக்கில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். சந்தேக நபருக்கு மறைந்திருப்பதற்கு உதவிகளை செய்த பொல்வத்த என்பவருக்கு எதிராகவும் தற்சமயம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இரகசியப் பொலிசார் நீதிமன்றத்திடம் தெரிவித்தனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11