கடந்த அரசாங்கம் பெற்ற கடனே நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது! நிதி அமைச்சர்

Share Button

உடனடி பொறுப்புக்கள் முகாமைத்துவ சட்டத்தின் கீழான யோசனை, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சுக்கு நிதியை பெற்றுக் கொள்வதற்கான குறைநிரப்புப் பிரேரணை பாராளுமன்றத்தில் இன்று விவாதிக்கப்படுகிறது.

சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர, கடன் முகாமைத்துவத்திற்கான தெளிவான முறைமை பின்பற்றப்பட்டுள்ளதாகக் கூறினார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் பொறுப்பற்ற விதத்தில் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டமையினால், நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்தது.

இந்தக் கடனை மீளச் செலுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு ஒழுங்குகளை மேற்கொண்டிருக்கிறது.

2019ஆம், 2020ஆம் ஆண்டு காலங்களில் அரசாங்கம் செலுத்த வேண்டிய முழுக் கடன் தொகையில் 75 சதவீதமானவை 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் பெற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் வீதி அபிவிருத்திக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசாங்கம் ஆறாயிரத்து 500 கோடி ரூபாவை ஒதுக்கியிருக்கிறது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம், மூன்றாம் பகுதிகளின் நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தம் இந்த வருட இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் என்றும் அவர் கூறினார்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *