நல்லாட்சியின் செயற்பாடுகள் மக்களை குழப்பத்தில் தள்ளியுள்ளது அஸ்கிரிய பீடாதிபதி

Share Button

நல்லாட்சியின் செயற்பாடுகள் மக்களை குழப்பத்தில் தள்ளியுள்ளது  என அஸ்கிரிய பீடாதிபதி சங்கைக்குரிய வெண்டருவே உபாலி தேரர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியின் மூலம் அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் தொடர்பில் பொதுமக்கள் முழுமையான நம்பிக்கை கொண்டிருந்தனர்.

இருப்பினும் கடந்த காலங்களில் இடம்பெற்ற சில செயற்பாடுகள் பொதுமக்களை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியதாகவும் அவர் கூறினார்.

புதிய பிரதமர் தொடர்பான நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

பொதுமக்களால் வாழ்க்கை சுமையை பொறுத்துக் கொள்ள முடியாத நிலை இந்தக் காலப்பகுதியில் உருவானது.

அத்தோடு கலாச்சாரம், சித்தாந்தங்கள் என்பன சீர்குலையும் நிலை ஏற்பட்டதாகவும் தேரர் கூறினார்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே காலத்திற்கு ஏற்ற புத்திசாலிமிக்க புதிய தீர்மானத்தை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டார் என்றும் அவர் கூறினார்.

நாட்டின் நிர்வாகம் தொடர்பாக பெரும் அனுபவத்தைக் கொண்டுள்ள திரு.மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பௌத்த சாசனம் தொடர்பில் சிறந்த தெளிவைக் கொண்டுள்ள தலைவராவார் என்றும் அவர் தெரிவித்ததுடன் புதிய நிர்வாகத்திற்கு நல்லாசியும் வழங்கினார்.

புதிய மாற்றத்தின் மூலம் இலங்கையின் எதிர்காலம் சிறந்ததாக அமையும் என்றும் அஸ்கிரிய பீடத்தை சேர்ந்த சங்கைக்குரிய மெதகம தம்மானந்த தேரர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தாய்நாடு தொடர்பில் சில விடயங்கள் இடம்பெற்றன. இவை பொறுத்துக் கொள்ள முடியாதவையாகும்.

பெரும்பாலான மக்கள் அந்த நிர்வாகம் தொடர்பில் பீதியை கொண்டிருந்தனர். பிரிவினைவாத செயற்பாடுகளும் செயற்படக்கூடிய நிலைமையும் காணக்கூடியதாக இருந்ததாகவும் தேரர் கூறினார்.

வாழ்க்கைச் சுமை, மத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகள் போன்றவை இடம்பெற்றுள்ளதுடன் பொதுமக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டதாகவும் தெரிவித்தார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *