சீரற்ற அரசியல் நிலை: ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு மகாசங்கத்தினர் பாராட்டு

Share Button

நாட்டில் இதுவரை நிலவி வந்த சீரற்ற அரசியல் நிலைமையை மாற்றுவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு மகாசங்கத்தினர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

இந்த மாற்றம் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் மிகவும் ஆரோக்கியமானது.

எனவே மகா சங்கத்தினரின் ஆசீர்வாதம் ஜனாதிபதிக்கு உரித்தாகும் என்று சாந்தி பௌத்த மன்றத்தின் அனுநாயக்கர் கொழும்பு சேருவில பௌத்த மத்திய நிலையத்தின் சங்கைக்குரிய கொட்டப்பொல அமரகீர்த்தி தேரர் தெரிவித்துள்ளார்.

யுத்த வீரர்களின் கீர்த்தி நாமத்திற்கு இழுக்கு ஏற்படும் வகையில் பல சட்டமூலங்களை ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழு நிறைவேற்றியது.

இந்த நிலைமையை மாற்றி நாட்டுக்கும், முப்படையினருக்கும் மீளவும் கௌரவத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக நியமித்தார்.

இந்த புதிய நிர்வாகத்தின் கீழ் நாட்டை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் துரித கதியில் முன்னெடுக்கப்படும் என்று தேரர் மேலும் தெரிவித்தார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்பொழுதே, தேரர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11