அரசியலை சிந்திக்காமல் அபிவிருத்தியை முன்னெடுக்கவும்! ஜனாதிபதி

Share Button

நாட்டின் அரசியல் நிலைமையை ஒரு தடையாக கருதாமல், இந்த வருடத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும், முறையாக மேற்கொள்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

இது விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். பொலனறுவை மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில் 2019 ஆம் ஆண்டை சுற்றாடல் பாதுகாப்பு வருடமாக பிரகடனப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை சிறந்த முறையில் முன்னெடுக்கும் அதேவேளை இயற்கை வளங்களை பாதுகாப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

மாவட்ட கல்வி, சுகாதாரம், குடிநீர், நீர்ப்பாசனம், காணி மற்றும் வீடமைப்பு உட்பட அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.

பெரும்போகத்தின்போது பாரிய அளவில் நெற் செய்கையை மேற்கொள்ளும் நோக்கில், விதை நெல்லை இலவசமாக வழங்கும் நடவடிக்கை குறித்தும் ஜனாதிபதி கூடுதல் கவனம் செலுத்தினார்.

 

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11