வியட்நாமில் இலங்கையின் கைத்தறி நெசவு உற்பத்திகள்

Share Button

இலங்கையில் கைத்தறி நெசவு மூலம் உற்பத்தி செய்யப்படும் பருத்தி மற்றும் பருத்தி கலந்த வர்ண ஆடைகளை வியட்நாமில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் முறையாக இலங்கையைச் சேர்ந்த வடிவமைப்புத் தயாரிப்பாளர் தமிக் அமரசேகர அவர்களின் வடிவமைப்புக் கண்காட்சி ஒன்று அண்மையில் ஹெனோய் நகரில் நடைபெற்றது.

மலைநாட்டு சேலை, திருமண சேலை மற்றும் பல வகை ஆடை வகைகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அங்குரார்ப்பண நிகழ்வுக்கு வியட்நாமியர்கள் மற்றும் ஹெனோய் நகரில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் அடங்களாக நூறு பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இக்கண்காட்சிக்கு வருகை தந்தவர்களுக்கு வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் ஹஸன்தி திஸாநாயக்க அவர்கள் இலங்கை கைத்தறி நெசவு குறித்து இதன்போது விளக்கமளித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *