சமாதானம், நல்லிணக்கம்: கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை!

Share Button

நாட்டில் நிலையான சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் அவர் உரையாற்றினார்.

நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் நீதியும், நியாயமும் வழங்கப்படுவது அவசியமாகும். சகல இனங்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகவாழ்வும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கலாசார நிகழ்வுகளும் இதில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ஆர் சம்பந்தன் உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டார்கள்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் இன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது.

கண்டி கட்டுகெலே செல்வ விநாயகர் ஆலயம் உட்பட இந்து ஆலயங்களில் தீபாவளி வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *