பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவது ஐ.தே.கவின் பொறுப்பு!

Share Button

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அமைச்சின் உத்தியோகபூர்வ முத்திரையை பயன்படுத்தி, அரச ஊழியர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளமை பற்றி கவலை அடைவதாக இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்களை எந்த வேளையிலும் பொறுப்பேற்கும் அதிகாரமும், அமைச்சுக்கான செயலாளர்களை நியமிக்கும் வல்லமையும் ஜனாதிபதிக்கு காணப்படுகிறது என்றும் அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் கருத்து வெளியிட்டார்.

அரச ஊழியர்கள் புத்தி சாதுரியமானவர்கள் என்பதால், அவர்கள் இந்தக் கடிதத்திற்கு பதில் வழங்கவில்லை.

ஜனாதிபதி எதிர்வரும் 14ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டவிருக்கிறார். இதனால், சீர்குலைக்கும் செயற்பாடுகளிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சகல தரப்புக்களையும் கேட்டுள்ளார்.

சிலரது செயற்பாடுகளினால் சமூகம் பிளவுபடலாம் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் அரச ஊழியர்களுக்கு தவறான செய்தியை வழங்கியுள்ளார். பாராளுமன்றத்தின் பெரும்பான்மை அதிகாரத்தை நிரூபிக்குமாறு அமைச்சர் உரிய தரப்புக்களை கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக தாம் செயற்படுவதாக பாராளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

உயர் அதிகாரம் கொண்ட பாராளுமன்றத்தின் ஊழியர்களும் அதிகாரத்தை வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக செயற்படுகின்றமையினால், அரச ஊழியர்களும் இதற்கு அமைவாக செயற்படுவது அவசியமாகும்.

பட்டதாரிகளுக்கு தொடர்ந்தும் தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்படவிருக்கின்றன. கம்பெரலிய, கிராம சக்தி ஆகிய வேலைத்தி;ட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவிருக்கின்றன.

கட்சி பேதமின்றி, பட்டதாரிகளுக்கு தொழில் வழங்க வேண்டும் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாகும் என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *