மக்களின் சேமநலன் குறித்து கடந்த அரசாங்கம் விலகிச் சென்றது

Share Button

அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குவதே தமது பிரதான நோக்கமென்று தொழிற்சங்க கூட்டு அமைப்புத் தெரிவித்துள்ளது.

இந்த ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் தொழிலாளர் பிரதிநிதிகள் சம்மேளனம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாட்டைப் பாதுகாக்கும் தொழிலாளர் சக்தி என்ற தலைப்பில் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் இந்த தொழில் சங்கக் கூட்டம் இடம்பெறும்.

அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் நோக்கில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பலர் எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் இந்த மக்கள் பேரணியை நடத்தவுள்ளனர்.

இன்று கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் லெஸ்லி தேவேந்திர இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில் கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற மத்தியவங்கி பிணைமுறி மோசடி மூலம் ஊழியர் சேமலாப நிதியத்தின் 500 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டதாக சாடினார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *