மேற்கு ஏமனில் இடம்பெறும் மோதல்களில் கிளர்ச்சியாளர்கள் பலர் பலி!

Share Button

மேற்கு ஏமனில் இடம்பெறும் மோதல்களினால் இதுவரையில் நூறற்றுக்கும் அதிகமான ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கு அரச படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் கடும் மோதல் இடம்பெறவதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

ஹோடீடா நகரில் இடம்பெற்ற சண்டையில் கடந்த 24 மணிநேரத்தில் 110 ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

அதிபர் மன்சூர் ஹைதிக்கு சவுதி அரேபியாவும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரானும் ஆதரவு அளிக்கின்றன. தலைநகர் சனா உட்பட பெரும்பான்மை பகுதி ஹவுத்தி கிளர்ச்சிப் படையின் வசம் காணப்படுகின்றன.

துறைமுக நகர் ஒன்றில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட 55 ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் உடல்கள் கிளர்ச்சியாளர் வசம் உள்ள தலைநகர் சனாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த பத்து நாட்களாகத் துறைமுக நகரத்தை மீட்பதற்காக ஹொடீடாவில் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில்இ இதில் 382 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-01 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231
நோயிலிருந்து தேறியோர் - 18
இறப்புக்கள் - 2