முதலாம் உலகப்போர்: நிறைவடைந்த தினத்தில் பிறந்த கனேடிய பெண்ணுக்கு இன்று வயது 100!

Share Button

முதலாம் உலகப்போர் நிறைவடைந்த தினத்தில் பிறந்த கனேடிய பெண்ணொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை(11) தனது 100ஆவது பிறந்தநாளை நிணைவு கூறுகின்றார்.

ஒட்டாவா – மொன்ரீயலைச் சேர்ந்த கியோவானா ரெவெண்டா மன்சினி என்ற குறித்த பெண்மனி கடந்த 1918ஆம் ஆண்டு உலகப் போர் முடிவுறுத்தப்பட்ட அதே நாள், அதே நேரத்தில் பிறந்துள்ளார்.

உலகப் போரை முடிவுறுத்தும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நேரத்தில் தான் பிறந்ததாக கியோவானா ரெவெண்டா மன்சினி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

முதலாம் உலகப் போரின் 100 வருட நினைவு தினம் உலகம் முழுவதும் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று மொன்ரீயலில் இடம்பெஞறும் அது தொடர்பான நிகழ்வுகளுக்கு கியோவானா ரெவெண்டா மன்சினி அழைக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த வருடமும் உலகப் போர் நினைவு தின நிகழ்விற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

தனது பிறந்தநாளுக்கு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, இரண்டமாம் எலிசபெத் மகாராணி மற்றும் பாப்பரசர் பிரான்சிஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளதாக மன்சினி மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *