இனிமேலும் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை எனும் முடிவுக்கு வந்துள்ள பிரித்தானிய தம்பதிகள்!

Share Button

பிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பமான சூ – போனி ரேய் தம்பதியினர் இதுவரையில் 21 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

தற்போது 40 வயதை எட்டியிருக்கும் சூ தன்னுடைய 14 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

மூன்று குழந்தை கள்பிறந்ததும், தடை செய்துவிடுமாறு உறவினர்கள் வளியுறுத்தியுள்ளனர்.

ஆயினும் மாற்று முடிவினை எடுத்த தம்பதியினர், அடுத்தடுத்து வரிசையாக குழந்தைகளை பெற்றுள்ளனர்.

கடந்த 2017ம் ஆண்டு மேலும் ஒரு குழந்தையை பெற்றதும் இதுதான் எங்களுடைய இறுதி குழந்தை என அறிவித்தனர்.

ஆயினும் கடந்த மே மாதம் தங்களுடைய யூடியூப் பக்கத்தில், மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக சூ அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த நிலையில் சூ தற்போது ஒரு அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இதற்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை எனும் முடிவிற்கு தானும் கணவரும் பேசி முடிவெடுத்துவிட்டதாக சூ தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *