இரு நாட்டு உறவையும் பலப்படுத்துவதே சந்திப்பின் நோக்கம் என்கிறார் ட்ரம்ப்

Share Button

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்துவதே, தான் வடகொரியா தலைவரை சந்திப்பதின் நோக்கம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

வடகொரியா ஜனாதிபதிக்கு நெருக்கமானவரான கிம் யோங் சொல் அவர்களை சந்தித்த போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார்.

திட்டமிட்ட அடிப்படையில் எதிர்வரும் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் குறித்த சந்திப்பு நடைபெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்போது, வடகொரியா ஜனாதிபதியின் கடிதம் ஒன்றும் ட்ரம்ப் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *