போதையிலிருந்த எயார் இந்தியா விமானியின் உரிமம் இரத்து!

Share Button

டெல்லியில் இருந்து லண்டன் நோக்கி பயனிக்க வேண்டிய எயார் இந்தியா விமானத்தின் விமானியின் உரிமம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு இடைநிறுத்தப் பட்டுள்ளது.

விமான விதிமுறை சட்டம் 24இன் பிரகாரம் விமானம் புறப்படுவதற்கு முதல் 12 மணி நேரத்துக்குள் விமானிகள் மது அருந்துவது குற்றமாகும்.

குறித்த விமானத்தின் விமானியான ஏ.கே.கத்பாலியா மது போதை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் மது அருந்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் எயார் இந்தியா விமானியின் உரிமத்தை மூன்று ஆண்டுகள் தற்காலிகமாக இரத்து செய்துள்ளனர்.

இந்த விமானி கடந்த 2017ஆம் ஆண்டிலும் இதுபோன்ற சர்ச்சையில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *