சத்தீஸ்கர் மாநிலம்: முதற்கட்ட வாக்குப்பதிவு 70 சதவீதம்!

Share Button

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 70 சதவீதமான மக்கள் வாக்களித்துள்ளனர்.

90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

நக்சலைட்களின் ஆதிக்கம் நிறைந்த 18 தொகுதிகளில் நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புகளுக்க மத்தியில் வாக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

மீதமுள்ள 72 தொகுதிகளில் நவம்பர் 20ஆம் திகதியும் தேர்தல் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கடமைகளில் துணை இராணுவத்தினர், பொலிஸார் என சுமார் ஒரு இலட்சம் படைவீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

தேர்தலை புறக்கணிக்குமாறு நக்சலைட்டுகள் அச்சுறுத்தல் விடுத்திருந்த போதிலும் மக்கள் ஆர்வமாக வாக்களித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

முதற்கட்ட வாக்குப்பதிவில் 18 தொகுதிகளிலும் சராசரியாக 70 சதவீதமான வாக்குகள் பதிவானதாக மாநில தேர்தல் ஆணையகத் துணை அதிகாரி உமேஷ் சின்ஹா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *