பாராளுமன்றம் கலைப்பு: எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

Share Button

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நிறைவடைந்தது.

பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்து பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இது தொடர்பான தீர்ப்பை மாலையளவில் அறிவிப்பதாகக் கூறியது.

பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானம் தொடர்பான சட்டபூர்வமான நியாயங்களை ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய உயர் நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தினார்.

அதன்படி பாராளுமன்றதை கலைத்தமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட சகல மனுக்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும் என அவர் உயர் நீதிமன்றத்திடம் கோரினார்.

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான அறிவிப்பு அரசியல்
அமைப்பின்படியே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

19ஆவது அரசியல் 33ஆவது சரத்திற்கு அமைய பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருப்பதாக சட்டமா அதிபர் சுட்டிக்காட்டினார்.

அவருடைய விளக்கத்திற்கு பின்னர் மேலதிகமான மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11